Jul 15, 2020 10:48 AM

ஹீரோயின் ஆனார் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

ஹீரோயின் ஆனார் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

மலையாள சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர், ’மிருதன்’, ‘நானும் ரவுடிதான்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு, ‘விஸ்வாசம்’ மூலம் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இதனால், இவரை அஜித்தின் ரீல் மகள் என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு.

 

இதற்கிடையே, ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான ‘குயின்’ தொடரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவ வேடத்தில் நடித்த அனிகா, அதன் மூலம்  தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி விட்டார். மேலும், சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டும் டிரெண்டாகி வருபவர், திடீரென்று சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு  தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

 

Anikha

 

15 வயதாகும் அனிகா, வயதுக்கு மீறியவாறு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார், என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை எல்லாம் கண்டுக்கொள்ளாத அவர், தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்ததோடு, கதாநாயகியாக நடிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

 

இந்த நிலையில், அனிகா மலையாள திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் இயக்கும் இப்படம் பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாக வைத்து உருவாகிறதாம். இப்படத்தில் அனிகா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.