Jul 03, 2018 01:07 PM

‘வஞ்சகர் உலகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் அனிஷா அம்ப்ரோஸ்

‘வஞ்சகர் உலகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் அனிஷா அம்ப்ரோஸ்

கன்னடம் மற்றும் மலையாலப் படங்களில் நடித்திருக்கும் அனிஷா அம்ப்ரோஸ், ‘வஞ்சகர் உலகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

தமிழ்ப் படத்தில் நடிப்பது குறித்து கூறிய அனிஷா அம்ப்ரோஸ், “செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது? என்பது தான் என் கதாபாத்திரம்.

 

வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர் லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது. வழக்கமான கேங்க்ஸ்டர் படமாக இப்படம் இருக்காது என நான் உறுதியாக சொல்வேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகு முறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று.” என்றார்.

 

அனிஷா அம்ப்ரோஸ், சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், 

 

விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். 

 

லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கும் இப்படத்தை மனோஜ் பீதா இயக்குகிறார்.