Dec 23, 2020 03:52 PM

படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு! - ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தம்

படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு! - ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது.

 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற வந்த நிலையில், ‘அண்ணாத்த’ படக்குழுவை சேர்ந்த எட்டு நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

இது குறித்து விளக்கமளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘அண்ணாத்த’ படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தலில் நான்கு பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

அதே சமயம், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.