Jul 03, 2018 11:42 AM

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி!

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி!

படங்களின் எண்ணிக்கையை பார்க்காமல், கதையையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பார்த்து படங்களை தேர்வு செய்யும் அரவிந்த்சாமி, இயக்குநர் ராஜபாண்டி சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒகே சொல்லியிருக்கிறார்.

 

‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இப்படத்தின் ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

 

மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.