Jul 03, 2018 03:35 AM

பாலா படத்தில் பிக் பாஸ் நடிகை!

பாலா படத்தில் பிக் பாஸ் நடிகை!

‘நாச்சியார்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா ‘வர்மா’ படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவா ஹீரோவாக அறிமுகாமும் இப்படம் தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

 

இப்படத்தில் ஏற்கனவே, ‘காலா’ நடிகை ஈஸ்வரி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வரும் நிலையில், பிக் பாஸ் நடிகை ஒருவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆம், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற ரைசா பாலாவின் ‘வர்மா’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Raiza

 

இரண்டாம் தர மாடலான ரைசா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதால் பிரபலமடைந்தவர், தற்போது ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ’பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.