Jul 13, 2020 04:48 PM

எளிமையாக நடந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்!

எளிமையாக நடந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்!

தென்னிந்திய மொழிகள் முழுவதும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்காக தமிழ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதே சமயம், இந்த ஆண்டு பிக் பாஸ் ஒளிபரப்பப்படுமா? என்பது கேள்விக்குறியாகவும் இருக்கிறது. இருப்பினும், மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை நிச்சயம் ஒளிபரப்பாக வேண்டும், என்ற முடிவில் விஜய் டிவி இருக்கிறது.

 

இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு பிக் பாஸின் நான்காவது சீசனுக்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், மலையாளத்தில் மோகன் லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மலையாள சீரியல் நடிகர் பிரதீப் சந்திரனுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

 

கருத்த முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரதீப்க்கு அனுபமா என்ற பெண்ணுடன் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. அவரது திருமண புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானதை தொடர்ந்து நடிகர், நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

അളിയോ...... happy marriedlife......

A post shared by veena nair (@veenanair143) on Jul 12, 2020 at 12:39am PDT