Jul 07, 2018 03:30 AM

பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! - ஆச்சரியப்பட வைத்த நடிகை

பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! - ஆச்சரியப்பட வைத்த நடிகை

வட இந்தியாவில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்கும்.

 

தமிழில் கமல் ஹாசன், தெலுங்கில் நடிகர் நானி, மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. அதே சமயம், போட்டியில் கலந்துக்கொள்பவர்களுக்கு அவர் அவர் தகுதிக்கு ஏற்றவாறு சம்பளமும் வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருப்பவர்களது சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகை ஒருவர் தான் அதிகமாக சம்பளம் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

பிரபல மலையாள ஹாட் நடிகையான சுவேதா மேனன் தான் அதிக சம்பளம் வாங்கிறாராம். ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் அவருக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக ஒரு நாளுக்கு ரூ.80 ஆயிரத்தை சம்பளமாக ரஞ்சனி ஹரிதாஸ் பெருகிறாராம்.

 

அனூப் சந்திரன் ரூ.71 ஆயிரமும், பியார்லே மாணி ரூ.50 ஆயிரமும், அர்ச்சனா சுசீலன் ரூ.30 ஆயிரமும், ஹிமா ஷங்கர் ரூ.20 ஆயிரமும் சம்பளமாக பெருகிறார்களாம். மற்ற போட்டியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.