Dec 23, 2020 05:17 AM

பிக் பாஸ் குரல் ரகசியம்! - புகைப்பட ஆதாரத்துடன் லீக்கான தகவல் இதோ

பிக் பாஸ் குரல் ரகசியம்! - புகைப்பட ஆதாரத்துடன் லீக்கான தகவல் இதோ

தமிழ் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக ஜனவரி 17 ஆம் தேதிக்கு பிறகு பிக் பாஸ் பைனல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக பிக் பாஸின் குரல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் தான் நான்காவது சீசனின் புரோமோ ஒன்றை, பிக் பாஸ் குரலை மட்டுமே வைத்து உருவாக்கியிருந்தார்கள்.

 

அப்படிப்பட்ட அந்த ஈர்ப்பு குரலுக்கு சொந்தக்காரர் யார்? என்ற கேள்வி அனைத்து பிக் பாஸ் ரசிகர்களிடம் உள்ளது. ஆனால், அதற்கு இதுவரை விடை கிடைக்காமல், அந்த குரல் விவகாரம் ரகசியமாகவே இருந்து வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்திற்கான விடை கிடைத்துள்ளது.

 

ஆம், பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார்? என்பது தெரிந்துவிட்டது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் சச்சிதானந்தம் என்பவராம். பாலிவுட் நடிகரான இவர் சில இந்தி படங்களில் நடித்திருப்பதோடு, அங்கு பிரபல குரல் வல்லுநராகவும் இருக்கிறார்.

 

இதோ அவருடைய புகைப்படம்,

 

Big Boss Voice Sachithanandam