Nov 28, 2019 09:28 AM

பாபி சிம்ஹாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

பாபி சிம்ஹாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், வலிமையான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. எஸ்.ஆர்.டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரமணன் புருஷோத்தமன் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.

 

ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சுனில் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்ட’, ‘இறைவி’, ‘ஜிகதண்டா’ போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். நந்தினி என்.கே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

Boby Simha

 

மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.