May 10, 2020 08:11 AM

பெண்களை ஏமாற்றிய காசி விவகாரத்தில் பாடகி சின்மயி! - பரபரப்பில் கோலிவுட்

பெண்களை ஏமாற்றிய காசி விவகாரத்தில் பாடகி சின்மயி! - பரபரப்பில் கோலிவுட்

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற கோழிக்கறி வியாபாரி, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் நட்பாகி, பிறகு அவர்களை காதலிப்பதாக கூறி, அவர்களுடன் பாலியல் ரீதியாக உறவுக்கொண்டு, அதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தற்போது காசி மீது போஸ்கோ சட்டம் பாய்ந்திருப்பதோடு, மேலும் பல வழக்குகளும் போடப்பட்டுள்ளது. காசி குறித்து தொடர்ந்து பல பெண்கள் கொடுக்கும் வாக்கு மூலம் போலீஸாரை திடுக்கிட செய்து வருகிறது.

 

கல்லூரி மாணவிகள் முதல் மருத்துவ பெண்கள் என பலதரப்பட்ட பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களை பிளாக் மெயில் செய்து பணம் சம்பாதித்த காசியின் வலையில் பிரபல திரைப்பட நடிகர் ஒருவரது மகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரது மகளும் சிக்கியிருப்பதாக கூறப்படுவதோடு, காசிக்கு பின்னால் சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனால், காசியிடம் நடத்தப்படும் விசாரணையில் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் கிடைக்கும் என்றும், அதனால் சில அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், காசியின் விவகாரத்தில் பிரபல பின்னணி பாடகி சின்மயி தலையிட்டிருப்பது பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

17 வயதுடைய கல்லூரி மாணவி உட்பட மூன்று பெண்கள் காசி மீது அளித்த புகாரை தொடர்ந்து காசி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் மேலும் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தி பத்திர்கையில் வெளியானது. அந்த பத்திரிகை செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாடகி சின்மயி, சைபர் குற்றங்கள் மட்டுமே கவனிக்க முடியும் என்றால், இதற்கு முன்பு சில பெண்கள் தங்களுக்கு ஆபாசமாக மெசஜ் அனுப்புவது மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது பற்றி புகார் அளித்திருக்கிறோமே, என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்மயி, சினிமா பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் மீது போலீஸ் எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யாததால், அதை தற்போது நினைவுக்கூரும் வகையில் அவர், காசி விவகாரத்தை வைத்து கேட்கிறார்.

 

சின்மயின் இந்த பதிவால், அவர் மீண்டும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச தொடங்கியிருப்பதாகவும், அதனால், தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் கவலை அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.