திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ‘சியான்கள்’ பட பாட்டு

மாறுபட்ட கதை களத்தோடு அறிமுக நாயகன் கரிகாலனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சியான்கள்’. வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படத்திற்கு முத்தமிழ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் மற்றொரு பாடலான “ஒட்டி ஒட்டி நானும் வரேன்...” என்ற பாடல் இன்று வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலை வெளியிட்டார். பாடல் வெளியாகி சில நிமிடங்களிலேயே வைரலாகியுள்ள இப்பாடல், இனிமையான மெலோடியாக, திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடலாக உள்ளது.
பாடல் வரிகள், இசை மற்றும் அதை படமாக்கிய விதம் என அனைத்தும் ரசிகர்களை ஈர்க்க கூடிய விதமாக உள்ள இப்பாடல் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது உறுதி.
’சியான்கள்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.