Nov 11, 2019 05:07 AM
இயக்குநராகும் காமெடி நடிகர்! - ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது புதிதல்ல என்றாலும், புதிதாக காமெடி நடிகர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ரேடியோவில் இருந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, ‘எல்.கே.ஜி’ படம் மூலம் ஹீரோவானதோடு, அப்படத்தின் கதை, வசனத்தையும் அவரே எழுதினார். அப்படம் வெற்றி பெற்ற பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காத பாலாஜி, தற்போது தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
’மூக்குத்தி அம்மன்’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதோடு என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவும் செய்கிறார்.
’எல்.கே.ஜி’ படத்தை தயாரித்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கே.கணேஷ் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.