Nov 13, 2019 04:36 PM

சிவகார்த்திகேயன் படத்திற்கு நீதிமன்றம் தடை!

சிவகார்த்திகேயன் படத்திற்கு நீதிமன்றம் தடை!

’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் அபேய் தியோல் நடித்திருக்கிறார்கள்.

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ’ஹீரோ’ படத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து சில படங்களை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.