Jul 08, 2018 04:48 PM

இணையத்தில் வைரலாகும் டிடி-யின் அதிரடி டான்ஸ்!

இணையத்தில் வைரலாகும் டிடி-யின் அதிரடி டான்ஸ்!

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவராக இருப்பவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

 

இதற்கிடையில், உடல் நிலை பாதிப்பால் சில காலம் நிகழ்த்தி தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டு ஓய்வில் இருந்த டிடி, இப்போதும் மீண்டும் நிகழ்ச்சி தொகுது வழங்க தொடங்கிவிட்டார்.

 

இந்த நிலையில், டிடி தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றின் இறுதிப் போட்டியில் இந்தி பாடல் ஒன்றுக்கு அதிரடியாக நடனம் ஆடினார். தற்போது இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் டிடி, எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். வீல்சேரில் அமர்ந்திருந்த போது இதை தான் ரொம்ப மிஸ் செய்தேன். ஆனால் என்னால் இப்போது முடிந்தது. உங்களாலும் முடியும், என்று தெரிவித்துள்ளார்.