Feb 10, 2021 04:31 PM

விஜய் டிவி டிடி-க்கு 2 வது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய் டிவி டிடி-க்கு 2 வது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் டிடி முக்கியமானவர். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தொகுப்பாளினி பணியோடு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்யும் டிடி, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.

 

இதையடுத்து, டிடி மீது பல்வேறு புகார்கள் தெரிவித்த ஸ்ரீகாந்தின் குடும்பத்தார், திருமணத்திற்குப் பிறகு டிடி தொகுப்பாளினியாக பணியாற்றுவதை விரும்பவில்லை என்றும், ஆனால், அதை கேட்காத டிடி தொடர்ந்து தனது பணியை செய்ததோடு, பல ஆண் நண்பர்களுடன் சுற்றினார் என்றும் கூறினார்.

 

ஆனால், இது குறித்து எந்த ஒரு விளக்கமும் சொல்லாத டிடி, வழக்கம் போல தனது வேலையை பிஸியாக இருக்க, டிடி குறித்து அவ்வபோது பல பரபரப்பு தகவல்களும், புகைப்படங்களும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.

 

இந்த நிலையில், டிடி-க்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை அவர் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த திருமண தகவல் பற்றி டிடி எந்த ஒரு மறுப்போ அல்லது விளக்கமோ கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.