May 11, 2020 10:10 AM

நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தில் நேர்ந்த மரணம்!

நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தில் நேர்ந்த மரணம்!

மேடை நிகழ்ச்சிகளில் இருந்து டிவி நிகழ்ச்சிக்கு முன்னேறிய ரோபோ சங்கர், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவரது மனைவி பிரியங்காவும், திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதோடு, அவரது மகளும் ‘பிகில்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.

 

தற்போது ரோபோ சங்கரின் குடும்பமே நடிப்பு துறையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் பற்றி எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதை வைரலாக்கி விடுகிறார்கள்.

 

இந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் அம்மா இன்று அதிகாலை மரணமடைந்தார். இதனால் ரோபோ சங்கரின் குடும்பம் பெரும் சோகத்தில் உள்ளது. இந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்களும் கவலை அடைந்திருக்கிறார்கள்.

 

Robo Shankar Wife