Mar 19, 2019 02:56 PM

4 மொழிகளில் வெளியாகும் தன்ஷிகாவின் ‘உச்சக்கட்டம்’

4 மொழிகளில் வெளியாகும் தன்ஷிகாவின் ‘உச்சக்கட்டம்’

கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநரான சுனீல் குமார் தேசாய், திரில்லர் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். தனது விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் மூலம் ரசிகர்களை நடுங்க வைக்க கூடிய விதத்தில் திரில்லர் படங்களை இயக்கும் இவர், ‘உச்சக்கட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார்.

 

தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘உச்சக்கட்டம்’ படத்தில் அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ரத்த காயங்களுடன் இருப்பது போன்று வெளியான இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய நிலையில், படத்தின் டீசர் மற்றும் சமீபத்தில் வெளியான போஸ்டர்களும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இயக்குநர் சுனீல் குமார் தேசாயின் திரில்லர் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘உச்சக்கட்டம்’ ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Director Sunil Kumar Thesai

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் வெளியாக உள்ள ‘உச்சக்கட்டம்’ 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.