Apr 21, 2025 06:27 AM

தனுஷின் ‘குபேரா’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

தனுஷின் ‘குபேரா’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “போய் வா நண்பா...’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷின் குரலில், சிறப்பான வரிகள், என அதிரடி மற்றும் மெலோடியாக உருவாகியுள்ள இப்பாடல் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 

 

Kubera Team

 

மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் ’குபேரா’ திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட குபேரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உண்மையான பான் இந்திய படைப்பாக  வெளியாகவுள்ளது.