Dec 04, 2019 12:38 PM

கோகுலத்தை கேவலப்படுத்த வரும் ‘தனுசு ராசி நேயர்களே’!

கோகுலத்தை கேவலப்படுத்த வரும் ‘தனுசு ராசி நேயர்களே’!

நான்கு ஐந்து பெண்கள், ஒரு ஹீரோ, கொஞ்சம் காமெடி, அதிகமான டபுள் மீனிங் வசனம், ஆகியவை இருந்தால் போதும் இளசுகளை கவர்ந்துவிடலாம், என்ற தவறான எண்ணத்தில் படம் எடுத்து பல்லு உடையும் அளவுக்கு பலர் மண்ணை கவ்வியிருக்க, தற்போது அதே நிலை, அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்திற்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னயில் சீட்டு கம்பெனி நடத்தி வரும் கோகுலம் சிட்ஸ் பைனான்ஸ் நிறுவனம் மலையாளத்தில் பல கெளரவமான திரைப்படங்களை தயாரித்து மரியாதை பெற்றிருக்க, தமிழில் அவர்கள் தயாரித்திருக்கும் முதல் படமான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தால் கேவலப்படப் போகிறார்கள், என்று அப்படம் குறித்து அறிந்தவர்கள், கோடம்பாக்க பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொள்கிறார்கள்.

 

இன்னும் இரண்டு தினங்களில் வெளியாக உள்ள இப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணாக இருந்தாலும், விளம்பரத்தில் பெரும்பாலும் யோகி பாபு தான் இடம் பிடித்திருந்தார். காரணம், அவரை காட்டி ரசிகர்களை ஏமாற்றிவிடலாம் என்று படக்குழு திட்டம் போட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், யோகி பாபு இந்த படத்திற்காக வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதில் எடுத்தக் காட்சிகளில் பலவற்றை எடிட்டர் வெட்டிவிட, தற்போது யோகி பாபுவின் வேடம் கெளரவ வேடம் போல தான் இருக்கிறதாம்.

 

இந்த சங்கதியை அறிந்த சினிமா வியாபாரிகள் தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை வாங்க மறுப்பதால், படத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

நகைச்சுவை படம் எடுத்திருக்கிறோம், என்ற நம்பிக்கையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் பெரும் ஏமாற்றம் அடைந்ததோடு, இந்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டாம் என்பதால், தற்போது வெளியாகும் விளம்பரங்களில் யோகி பாபுவை நீக்கிவிட்டு, ஹரிஷ் கல்யாணையும், அவருடன் ஜோடி போட்ட ஹீரோயின்களை மட்டுமே விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

Gokulam gopalan

 

மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து, மிக பிரம்மாண்டமான முறையில் படம் தயாரித்து, கெளரவமான நிறுவனம் என்ற பெயர் எடுத்திருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தமிழில் தயாரித்திருக்கும் தங்களது முதல் படமான இந்த ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற டபுள் மீனிங் படத்தால் நிச்சயம் கெளரவத்தை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.