Jul 06, 2018 06:18 PM

மது போதையில் கார் ஓட்டிய இயக்குநர் பாரதிராஜாவின் மகன் கைது!

மது போதையில் கார் ஓட்டிய இயக்குநர் பாரதிராஜாவின் மகன் கைது!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மீது மது போதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரது சொகுசு காரையும் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘தாஜ்மஹால்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் மனோஜ். பாரதிராஜாவின் ஒரே மகனான இவர், நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

 

இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Manoj

 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு மையம் என்ற அமைப்பை தொடங்கி தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இயக்குநர் பாரதிராஜா, பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் நிலையில், அவரது மகன் சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.