Feb 10, 2021 02:23 PM

’மாயத்திரை’ பட டீஸரை வெளியிட்ட இயக்குநர் பிரியதர்ஷன்

’மாயத்திரை’ பட டீஸரை வெளியிட்ட இயக்குநர் பிரியதர்ஷன்

அறிமுக இயக்குநர் தி.சம்பத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயத்திரை’. திகில் படமான இப்படத்தை ப.சாய் தயாரித்துள்ளார். ‘முருகா’, ‘பிரிச்சிருக்கு’ உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ‘டூலெட்’ பட புகழ் ஷீலா ராஜ்குமார் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். 

 

‘கோலி சோடா’, ‘சண்டிவீரன்’ படங்களுக்கு இசையமைத்த எஸ்.என்.அருணகிரி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸரை இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரியதர்ஷன் இன்று வெளியிட்டார். மேலும், டீஸரைப் பார்த்து பாராட்டியதோடு, படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டதாக உருவாகியிருக்கும் இப்படத்தில், பயமுறுத்தும் காட்சிகள் அதிகம் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.