Jun 09, 2018 09:28 AM

குருவிடம் பாராட்டு பெற்ற பா.ரஞ்சித்!

குருவிடம் பாராட்டு பெற்ற பா.ரஞ்சித்!

ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித், அப்படத்தில் சில குறைகளை வைத்தாலும், தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கும் ‘காலா’ படத்தில் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டார். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கான படமாக காலா இருக்கிறது.

 

மக்கள் மட்டும் இன்றி, ஊடகங்களும் திரையுலக பிரபலங்களும் காலா படத்தையும், இயக்குநர் பா.ரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் குருவான இயக்குநர் வெங்கட் பிரபு, தனது சிஷ்யனை பாராட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Venkat Prabhu

 

அதில், “என்ன ஒரு படம்! இதை விரும்புகிறேன். இரஞ்சித், உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன முதிர்ச்சி! என்ன உருவாக்கம்! என தகவல்கள்! என்ன பிரம்மாண்டம்! என்ன நடிப்பு! என்ன சமநிலை! என்னை பொறுத்த வரை இதுதான் இதுவரையிலான உனது சிறந்த படம்!” என்று தெரிவித்துள்ளார்.