Jun 08, 2018 08:21 AM

எந்த இயக்குநருக்கும் கிடைக்காத பெருமை ரஞ்சித்துக்கு கிடைத்தது!

எந்த இயக்குநருக்கும் கிடைக்காத பெருமை ரஞ்சித்துக்கு கிடைத்தது!

‘அட்ட கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பாமர மக்களின் அரசியலைப் பேசியவர், ‘கபாலி’ மூலம் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்தை பேச வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

தலீத் சிந்தனைவாதியான ரஞ்சித், சினிமாவில் பலர் மறைமுகமாக பேசியதை தைரியமாக வெளிப்படையாக பேசி பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் பெற்றார். தற்போது ரஜினியை வைத்து ‘காலா’ மூலம் மீண்டும் சாமானிய மக்கள் பிரச்சினையையும், அரசியலையும் பேசியிருக்கும் ரஞ்சித்துக்கு இந்த முறை ஒட்டு மொத்த தமிழகர்களிடமும் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

அதுமட்டும் இன்றி, இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குநர்களுக்கும் கிடைக்காத பெருமையும் ரஞ்சித்துக்கு கிடைத்திருக்கிறது. ஆம், ‘காலா’ படத்தின் ரிலீஸுக்காக ரஜினிக்கு வைத்த அதிக உயரமான கட்-அவுட் போல இயக்குநர் ரஞ்சித்துக்கும் ரசிகர்கள் கட்-அவுட் வைத்திருக்கிறார்கள். 

 

Ranjith

 

ரஜினிகாந்த் படம் என்றாலே அவர் மட்டுமே தெரிவார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களோ அல்லது இயக்குநர்களோ இரண்டாம் பட்சம் தான் என்ற நிலையை மாற்றி, ‘காலா’ படத்தை ரஜினியின் படமாக மட்டும் இன்றி, தனது படைப்பாகவும் ரஞ்சித் கொடுத்திருக்கிறார்.

 

ரஞ்சித்தின் இந்த உயரமான கட்-அவுட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.