Feb 13, 2021 07:14 AM

இயக்குநர் ஷங்கரின் புதிய படம் அறிவிப்பு!

இயக்குநர் ஷங்கரின் புதிய படம் அறிவிப்பு!

கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாததால் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். 

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இப்படம் குறித்து கூறுகையில், “இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்.” என்றார்.

 

Actor Ramsaran

 

இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், 

 

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15 வது திரைப்படமாகவும், ஸ்ரீ 

 

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.