Mar 28, 2019 12:15 PM
முன்னணி ஹீரோவுக்கு ஜோடியான ‘டப்ஸ்மேஷ்’ மிர்னாலினி!

டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்ற மொபைல் ஆப் மூலம் பிரபலமான பலர் தற்போது சினிமாவில் நடிக்கு வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், டப்ஸ்மேஷில் ரொம்பவே பிரபலமானவர் மிர்னாலினி. இவரை சினிமாவில் நடிக்க வைக்க பலர் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாம்பியன்’ படத்தின் மூலம் மிர்னாலினி சினிமாவில் அறிமுகமானாலும், அப்படத்திற்கு முன்பாக அவர் நடித்த மற்றொரு படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ முதலில் வெளியாக உள்ளது.
இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து முடித்திருக்கும் மிர்னாலினி, தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜிகர்தண்டா’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடிக்கிறார்.