Jan 01, 2021 02:25 PM

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் - எச்சரிக்கையோடு வெளியான அறிக்கை

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் - எச்சரிக்கையோடு வெளியான அறிக்கை

சிலம்பரசன் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு தடை போடும் விதமாக சிலர் பிரச்சினை செயதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “’ஈஸ்வரன்’ திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகும்” என்று அறிவித்திருப்பதோடு, படத்தின் வெளீயீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை!

 

அன்புடையீர் வணக்கம்.

 

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

 

‘ஏஏஏ’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்தப்படம் வெளியிடனும்னா ‘ஏஏஏ’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை.

 

அந்தத்தீய சக்திகளுக்கு எமது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 

அந்தத்தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும்.

 

‘ஏஏஏ’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘ஏஏஏ’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை.

 

அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாகப் பேசியும் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 

எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நாங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

நன்றி! வணக்கம்.

 

இப்படிக்கு

 

என்.சுபாஷ சந்திரபோஸ்

செயலாளர்

 

ஜே.எஸ்.கே.சதீஷ்

செயலாளர்

 

ஆர்.சிங்கார வடிவேலன்

துணைத் தலைவர்

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.