Mar 19, 2019 02:44 PM

ரூ.150 கோடி கடனில் பிரபல இயக்குநர்! - பைனான்சியர் வெளியிட்ட தகவல்

ரூ.150 கோடி கடனில் பிரபல இயக்குநர்! - பைனான்சியர் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் சொந்தமாக படம் தயாரிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் கடனில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னணி நடிகரான தனுஷும் கடன் தொல்லையால், படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ரூ.150 கோடி கடன் இருப்பதாக பைனான்சியர் ஒருவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

 

தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் கெளதம் மேனன், அப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருவதற்கும் கடன் தொல்லை தான் என்றும் கூறப்படுகிறது.

 

Goutham Vasudev Menon

 

படம் இயக்குவதோடு, படம் தயாரிப்பு, வெப் சீரிஸ் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் என்று பலவற்றில் ஈடுபட்ட கெளதம் மேனனுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதோடு, அவர் வாங்கிய கடன் தற்போது வட்டியோ சேர்த்து ரூ.150 கோடியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.