Apr 23, 2019 01:03 PM

திரையுலக அனுபவத்தை புத்தமாக வெளியிட்ட பிரபல நடிகர் ஏ.ஆர்.எஸ்!

திரையுலக அனுபவத்தை புத்தமாக வெளியிட்ட பிரபல நடிகர் ஏ.ஆர்.எஸ்!

பிரபல மேடைநாடக மற்றும் திரைப்பட நடிகரான ஏ.ஆர்.எஸ் என்கிற ஏ.ஆர்.சீனிவாசன், தனது மேடைநாடக மற்றும் திரையுலக அனுபவத்தினை ‘அமுதசுரபி’ மாத இதழியில் தொடராக எழுதி வந்தார். தற்போது அதை ‘தித்திக்கும் நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தமாக எழுதியுள்ளார்.

 

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பிரபல கர்நாடகப் பாடகி காயத்ரி கிரீஷின் இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நல்லி குப்புசாமி செட்டி புத்தகத்தை வெளியிட, அமுதசுரபி மாத இதழியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் நடிகர்கள் சார்லி, மாது பாலாஜி, சின்னத்திரை இயக்குநரும் எழுத்தாளருமான வெங்கட் ஆகியோர் கலந்துக் கொண்டு, புத்தகத்தைப் பற்றியும், நடிகர் ஏ.ஆர்.எஸ் பற்றியும் பாராட்டி பேசினார்கள்.

 

Thiththikkum Ninaivugal Book Launch

 

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் சச்சு, ராஜஸ்ரீ, காஞ்சனா, நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, டிவி.வரதாரஜன், காந்தன், பக்தி சரண், கல்வியாளர் ஓய்.ஜி.பி, வீணை வித்வான் ரேவதி கிருஷ்ணா, எஸ்.வி.ரமணன் மற்றும் ஏராளமான மேடைநாடகக் கலைஞர்கள், திரையுலகினர்கள், எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியினை சி.வி.சந்திரமோகன் தொகுத்து வழங்கினார். நடிகர் ஏ.ஆர்.எஸின் மகன் ஜெய் நன்றியுரையாற்றினார். விழாவிற்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர்கள் மேஜர் தாசன், ரமணி, கடையும் ராஜு ஆகியோர் வரவேற்றார்கள்.

 

Thiththikkum Ninaivugal Book Launch