Mar 28, 2019 03:00 PM

பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்! - வைரலாகும் வீடியோ

பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்! - வைரலாகும் வீடியோ

ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலர் அவர்களது செல்போனை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல நடிகர் தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பாலகிருஷ்ணா, தற்போது ஆந்திர தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில், ஆந்திர மாநிலம், ஹிந்துபூர் தொகுதியில் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடும் அவர், தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணாவை பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்ற போது, கோபமான அவர், பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்தார். மேலும், “உன்னை கொலை செய்துவிடுவேன், எனக்கு குண்டு வீசவும் தெரியும், கத்தி வீசவும் தெரியும்” என்றும் மிரட்டியுள்ளார்.

 

பாலகிருஷ்ணாவின் இந்த அடாவடி தனத்தையும், கொலை மிரட்டலையும் மற்றொரு நிருபர் தனது செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ,