Mar 23, 2019 03:49 AM

வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய பிரபல நடிகர்! - ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய பிரபல நடிகர்! - ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகர்களாகவும் இருக்கும் சிலர், பெரும் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். மக்களிடம் தங்களைப் பிரபலப்பத்திக் கொள்ளவோ அல்லது தங்களிடம் இருக்கும் பணத்திற்கு கணக்கு காட்டவும் படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

அதே சமயம், சில திரைப்பட நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பல படங்களை தயாரிப்பது, பல படங்களை விநியோகம் செய்வது என்று பல அதிரடியான விஷயங்களை செய்வதோடு, சில சர்ச்சைகளிலும் சிக்கிவிடுவதுண்டு. இதுபோல பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போயுள்ளது.

 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் கல்வி குழுமம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

 

திரைப்படங்களில் நடிப்பதோடு, பல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கும் ஐசரி கணேஷ், பிரபு தேவாவுடன் இணைந்து பல படங்களை தயாரித்த நிலையில், தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் தயாரித்து வருகிறார். இதில் ஒன்று தான் சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி’.

 

Isari Ganesh

 

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, கடந்த 3 நாட்களாக ஐசரி கணேஷுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.

 

சென்னையில் உள்ள ஐசரி கணேஷ் இல்லம், பல்கலைக்கழகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 3 இடங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.300 கோடி வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.