மீண்டும் சிம்புவை நிராகரித்த பிரபல இயக்குநர்!

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சிம்பு விஷயத்தில் மட்டும் அது தலை கீழாக உள்ளது. அவரது ரசிகர்களே அவரை கலாய்த்தும், விமர்சித்தும் சோசியல் மீடியாக்களில் வெளியிடும் பதிவுகள் டிரெண்டாகி வருகிறது.
சிம்புவால் சரியான படம் கொடுக்க முடியவில்லை என்பதோடு, கிடைக்கும் நல்ல வாய்ப்புகளையும் தனது வம்புத்தனத்தால் கெடுத்துக் கொள்கிறாரே, என்பது தான் அவரது ரசிகர்களின் பெரும்கவலையாக இருக்கிறது.
அந்த வகையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதும், அதன் பிறகு அவர் வெளிநாட்டில் தலைமறைவாக சில நாட்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பியதோடு, சபரிமலைக்கு மாலை போட்டதும் உலகம் அறிந்த ஒன்று தான். அத்துடன், ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவுடன் சமரசமாகி, ’மாநாடு’ படத்தை மீண்டும் தொடங்க இருந்தார்.
ஆனால், சிம்பு மாலைபோடும் போது அவரை சந்தித்த சுரேஷ் காமாட்சியால், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால், மாநாடு எப்போது தொடங்கும் என்பது அவருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
அதாவது, ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்தாலும் சரி, நடிக்கவில்லை என்றாலும் சரி, மாநாடு படம் தொடங்கினாலும் சரி, தொடங்கவில்லை என்றாலும் சரி, தற்போது தான் வேறு ஒரு படத்தை உடனடியாக இயக்க வேண்டும், என்று வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டாராம்.
அதன்படி, சமீபத்தில் ராகவா லாரன்ஸை சந்தித்து ஒரு கதை சொன்னவர், தற்போது அவரை வைத்து அந்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டாராம்.