Mar 12, 2019 07:17 AM

பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகர்!

பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகர்!

‘தி கபில் ஷர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சி இந்தி தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாகும். இதில் பிரபல நடிகர்கள் வித்தியாசமான வேடங்கள் போட்டி ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.

 

அப்படி இந்த ஷோவில் வயதான பாட்டி வேடம் போட்டு நடித்தவர் அலி அஸ்கர். இவர் நேற்று காலை பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

 

கார் முழுவதும் நொறுங்கும் அளவிற்கு விபத்து ஆக அலி எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பியுள்ளாராம்.

 

Ali Askar

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் தான் காரை ஓட்டிச்சென்றேன். சிக்னலுக்காக காரை ஓட்டி செல்லும் போது பெரிய சத்தம் கேட்டது. அப்போது தான் தெரிந்தது என் முன்னே இருக்கும் லாரியின் மீது நான் மோதியிருப்பது. கார் பயங்கரமாக சேதமடைந்தாலும், நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.” என்றார்.