தமன்னாவை செருப்பால் அடித்தது ஏன்? - இளைஞர் வாக்குமூலம்!

ஐதாராபாத்தில் நேற்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை தமன்னா மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடை திறப்பு விழாவுக்கு தமன்னா வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி எறிந்தார். சற்று குறிதவறி பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். கரிமுல்லா என்ற அந்த பட்டதாரி வாலிபர், சமீபகாலமாக தமன்னா நடிக்கும் படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் தான் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.