Feb 15, 2021 03:28 AM

சிம்பு நடிகைக்கு கோவில் கட்டிய ரசிர்கள்!

சிம்பு நடிகைக்கு கோவில் கட்டிய ரசிர்கள்!

சினிமா நடிகைகளிலேயே நடிகை குஷ்புவிற்கு தான் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அதன் பிறகு இதுவரை எந்த நடிகைக்கும் கோவில் கட்டாத தமிழக ரசிகர்கள், தற்போது சிம்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்கியிருக்கும் தெலுங்கு நடிகைக்கு கோவில் கட்டியுள்ளனர்.

 

சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தின்று வெளியான படம் ‘ஈஸ்வரன்’. இதில் நாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும், ஒடிடி-யில் வெளியான ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படங்களை தொடர்ந்து மேலு சில தமிழ்ப் படங்களின் வாய்ப்புகளை பெற்றிருக்கும் நிதி அகர்வால், தெலுங்கு பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். நிதி அகர்வாலின் சிலையை வைத்து கற்பூரம் காட்டி வழிபாடும் நடத்தியுள்ளார்கள்.

 

Actress Nidhi Agarwal Temple

 

சமூக வலைதளங்களில் வைரலாகும் நிதி அகர்வால் கோவில் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்களில் பலர் கலாய்க்க, பலர் வரவேற்பு தெரிவித்ததோடு, குஷ்புவிற்கு பிறகு கோவில் கண்ட நிதி அகர்வால் வாழ்க, என்று பாராட்டியும் வருகிறார்கள்.