அஜித் அறிக்கை! - ரசிகர்களின் பதில் நடவடிக்கை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள், சென்னையில் நடந்த பிரதமர் நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டி போன்ற இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்டு, வீடியோக்கள் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, படு கேவலமான செயலாகவும் மக்கள் பார்த்தனர்.
இதனால் அப்செட்டான அஜித், இது தொடர்பாக ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அஜித்தின் அறிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அஜித்தின் அறிக்கைக்கு பதில் நடவடிக்கையாக மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர், ”உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம், உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்” என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்களை மதுரையில் பல பகுதிகளில் வைத்து வருகிறார்கள்.