Mar 20, 2019 04:34 AM

முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் விருது விழா! - டிக்கெட் விலையால் ரசிகர்கள் அதிர்ச்சி

முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் விருது விழா! - டிக்கெட் விலையால் ரசிகர்கள் அதிர்ச்சி

திரையுலக பிரமுகர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் பல விழாக்களுக்காகவே நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை முன்னிருத்தவும், அதே சமயம், அதனை கலை நிகழ்ச்சி பாணியில் நடத்தி கல்லாகட்டவும் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் தான், எந்த விருது விழாவாக இருந்தாலும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு ஒரு தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும், அப்படி வழங்கும் விருது விழாவுக்கு மட்டுமே நடிகர்கள் பங்கேற்க வேண்டும், என்று நடிகர் சங்கம் புதிய விதியை வகுத்துள்ளது. அதன்படி, சென்னையில் விருது விழாக்கள் நடத்தும் சில நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இந்திய சினிமாவின் முக்கிய விருது விழாவான பிலிம்பேர் விருது விழா, வரும் சனிக்கிழமை மும்பையில் நடைபெற உள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறும் இவ்விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கே உள்ளனர்.

 

இந்த விருது விழாவுக்கான டிக்கெட் விற்பனையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதே சமயம், விழாவுக்கான டிக்கெட் விலையை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

ரூ.10,000 தாம் டிக்கெட்டின் ஆரம்ப விலையாம். அதேபோல், முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ரூ.3 லட்சமாம்.