Nov 10, 2019 03:12 AM

நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமான கமல் மகள்!

நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமான கமல் மகள்!

சினிமா பிரபலங்கள் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பதோடு, ரசிகர்களிடம் நேரடியாக பேசுவது, அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பல ரசிகர்கள் நல்லபடியாக பேசினாலும், சிலரோ அத்துமீறி அநாகரீகமாக பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸும் அப்படி ஒரு பிரச்சினையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார்.

 

விஜயின் ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், ’போராளி’, ‘நவீன சரஸ்வதி சபதம்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்தார். தற்போது ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருக்கிறார்.

 

Nietha Thomas

 

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களிடம் கேள்வி பதில் உரையாடிய நிவேதா தாமஸிடம் ரசிகர்கள் மிக மோசமான கேள்விகளை கேட்டுள்ளனர். ”திருமணம் எப்போது”, “நீங்கள் கன்னித்தன்மை உடையவரா” உள்ளிட்ட அவரால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு படுமோசமான கேள்விகளை கேட்டு அவரை கதறவிட்டிருக்கிறார்கள்.

 

இதனால், கடுப்பான நிவேதா தாமாஸ், பெரும் கோபம் கொண்டு, ரசிகர்களை காய்ச்சியதோடு, அவர்களுக்கு அட்வைஸும் செய்திருக்கிறார்.