Nov 17, 2019 05:14 AM

சிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்! - ஏன் தெரியுமா?

சிம்புவின் ஆட்டோகிராபை கிழித்தெறிந்த ரசிகர்! - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் சிம்பு. அதற்கு தகுந்த அனைத்து திறமைகளும், ஏராளமான ரசிகர்களும் இருந்தும், அவரால் தொடர்ந்து படங்களைக் கூட கொடுக்க முடியாமல் இருக்கிறது. 

 

தனக்கு வரும் நல்ல படங்களை தனது அடாவடித் தனத்தால் இழக்கும் சிம்பு, நடித்துக் கொண்டிருக்கும் படங்களிலும் ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் தயாரிப்பாளர்களை நோகடித்து நுங்கெடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

அதனால் தான், ‘மாநாடு’ படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மேலும், சில தயாரிப்பாளர்கள் சிம்பு மீது புகார் அளித்திருக்கின்றனர்.

 

இதற்கிடையே, ”நடந்தவைகளை மறப்போம், இனி நல்லபடியாக இருப்போம்”, என்ற ரீதியில் அனைவரிடத்திலும் சமாதானம் பேசியிருக்கும் சிம்பு, தற்போது மாலை போட்டு சபரிமலை சுவாமியாகிவிட்டார். மலைக்கு போய்ட்டு வந்ததும், நல்ல பிள்ளையாக, படங்களில் நடிப்பேன், என்று தனது நட்புகளிடம் வாக்குறுதியளித்திருக்கிறாராம்.

 

இந்த நிலையில், சிம்புவின் நண்பரும், நடிகருமான மகத், சிம்பு ஓட்டல் ஒன்றில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, “டின்னர் வித் சுவாமி, சுவாமியே சரணம்” என்று தனது சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார்.

 

வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்க்கும் சிம்பு ரஷிகர்கள் மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக கோபமடைகிறார்கள்.

 

ஆம், பல ரசிகர்கள் சிம்புவுக்கு எதிராக மரணகலாய் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், ”எவ்வளவு திறமை இருந்தாலும் தலைகனம் வாழ்க்கையை மாற்றி விடும். சிம்புவின் வெறி தன ரசிகன் நான், ஆனால் அது சிம்புவை நேரில் பார்த்த நொடிக்கு முன் வரை என்று ஆனது. சிறிய புன்னகை அல்லது ரசிகன் பக்கம் பார்வை என்று இல்லாமல் நான் வாங்கிய ஆட்டோகிராப் கிழித்து தான் எறிந்தேன்” என்று கமெண்ட் தெரிவித்துள்ளார்.

 

சினிமா பிரபலங்களின் கோபத்தை தணிக்க மாலைப்போட்டு மலை ஏறும் சிம்பு, ரசிகர்களின் கோபத்தை தணிக்க என்ன செய்ய போகிறாரோ.