Feb 17, 2021 05:03 AM

கெளதம் மேனன் பட நாயகிக்கு 2வது திருமணம்!

கெளதம் மேனன் பட நாயகிக்கு 2வது திருமணம்!

கெளதம் வாசுதேவ் மேனனின் முதல் படமான ‘மின்னலே’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாதவன், ரீமா சென் நடித்திருந்த இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் மாதவனுக்கு ஜோடியாக தியா மிர்சா நடித்தார். இப்படத்தை தொடர்ந்து பல இந்தி படங்களில் தியா மிர்சா நடித்து வந்தார்.

 

இதற்கிடையே, 2014 ஆம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை தியா மிர்சா, பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

 

இந்த நிலையில், 40 வயதாகும் நடிகை தியா மிர்சா, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த காதல் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

 

Actress Diya Mirza