Nov 18, 2019 11:12 AM
தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தானாம்!

திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், விமர்சகர், எழுத்தாளர் என்று பன்முகத்திறமை கொண்டவராக திகழும் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் அவதாரம் எடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கம் பணிகள் முடிவடைந்து தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தனஞ்செயன் இயக்கும் படத்தில் விதார்த் மற்றும் நட்டி ஆகியோர் ஹீரோக்களாக ஒப்பந்தமகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.