நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்! - பிரபு தேவாவின் மனைவி காட்டம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார், என்ற பெருமையோடு வலம் வரும் நடிகை நயன்தாரா, முதலில் சிம்புவை காதலித்ததும் பிறகு திருமணம் ஆன பிரபு தேவாவை காதலித்ததும் அனைவரும் அறிந்தது தான். நயன்தாரா மீது கொண்ட காதலால், பிரபு தேவா அவரது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நயன்தாராவின் காதலையும் கட் செய்தவர், இயக்கம் நடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
இதற்கிடையே, பிரபு தேவாவின் காதல் முறிவுக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது பழைய காதல்கள் தோல்வி குறித்து பேசுகையில், நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்க வாய்ப்பில்லை. நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட தனியாக இருப்பது நல்லது, என்பதை உணர்ந்ததால் தான் பிரிந்துவிட்டேன், என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நயன்தாராவின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபு தேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”நயன்தாரா தனது கணவரை திருடி விட்டார். அடுத்தவர் கணவரை திருடும் பெண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும், பார்த்த இடத்திலேயே உதைப்பேன்.” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
மேலும் பிரபு தேவா குறித்து கூறிய ரமலத், திருமணம் ஆனதில் இருந்து 15 ஆண்டுகள் அவர் எங்களை அன்புடன் கவனித்துக் கொண்டார். ஒரு கணவராக, தகப்பனாக அவர் மிகவும் சிறந்தவர். அவர் நயன்தாராவை காதலித்திருப்பார், என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
பிரபு தேவா தற்போது முற்றிலுமாக மாறிவிட்டதாக கூறியிருக்கும் ரமலத், புதிய வீடி ஒன்றை தங்களுக்காக அவர் வாங்கி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.