Jul 06, 2018 06:49 PM

நான் விஜய் படங்களை பார்த்து ரசிப்பவன்! - பிரபல அரசியல் தலைவர் ஒபன் டாக்

நான் விஜய் படங்களை பார்த்து ரசிப்பவன்! - பிரபல அரசியல் தலைவர் ஒபன் டாக்

‘துப்பாக்கி’ யில் தொடங்கி ‘மெர்சல்’ வரை விஜய் படங்கள் அனைத்தும் பெரும் பிரச்சினையோடு தான் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படமும் பிரச்சினையை சந்திக்க தொடங்கியுள்ளது.

 

சர்கார் படத்தின் பஸ்ட் லுக் வெளியானதும், அதில் இடம்பெற்ற விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படத்திற்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜயை மிரட்டும் தோனியிலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

 

இதற்கிடையே, சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கு சிகரெட் புகைக்கும் காட்சி மற்றும் விளம்பர போஸ்டர்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசின் பொது சுகாதார அமைப்பு உத்தரவிட்டிருப்பதோடு, நீக்கவில்லை என்றால், படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

 

குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் விஜயின் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்ததால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இந்த நிலையில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவரே தான் விஜய் படங்களை பார்த்து ரசிப்பவன், என்றும் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது.

 

ஆம், பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் படத்திற்கு தான் ஏன் எதிர்ப்பு தெரிவித்தேன், என்பது குறித்து விளக்கம் அளிக்கும் போது, தான் விஜய் படங்களை பார்த்து ரசிப்பவன், என்றும் கூறியிருக்கிறார்.

 

Anbumani Ramadass

 

இது குறித்து கூறிய அவர், “விஜய் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். படமும் நன்றாக இருக்கும். சர்க்கார் படத்தில் விஜய் தான் ஹீரோ. இயக்குநர் முருகதாஸும் நல்லவர் தான். ரஹ்மான் இசையமைக்கிறார். இதை விட படத்திற்கு வேறென்ன வேண்டும். சிகரெட் பிடித்து தான் படத்தை விளம்பரப்படுத்த வேண்டுமா என்ன? இதனால் அவரது ரசிகர்களும் சிகரெட் பிடிப்பார்கள்.

 

இது தவிர்க்கப்பட வேண்டும் அவர் ரசிகர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். கேன்சர் வந்து இறந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.” என்று தெரிவித்துள்ளார்.