Apr 19, 2019 07:00 AM

25 வது படத்திற்காக மீண்டும் லட்சுமனனுடன் இணையும் ஜெயம் ரவி!

25 வது படத்திற்காக மீண்டும் லட்சுமனனுடன் இணையும் ஜெயம் ரவி!

2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது 24 படங்களில் நடித்து முடித்தவர், தனது 25 வது படத்தை வெற்றிப் படமாக கொடுப்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், ஜெயம் ரவிக்கு ’ரோமியோ ஜூலியட்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த லட்சுமனனை தனது 25 வது படத்தின் இயக்குநராக தேர்வு செய்துள்ளார்.

 

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ என ஜெயம் ரவியை வைத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த லட்சுமன், தற்போது மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணைவதோடு, அவரது 25 வது படத்தில் இணைவதால் இப்படத்தின் மீது தற்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Director Lakshman

 

இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகி மற்றும் இத நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமன் கூறுகையில், “ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம் இது. கடந்த 24 படங்களில் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக் ஜனரஞ்சகமான படமாக இது தயாராக இருக்கிறது.” என்றார்.