Nov 28, 2019 09:42 AM

ஜோதிகா, சசிக்குமார் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது!

ஜோதிகா, சசிக்குமார் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது!

தரமான வெற்றிப் படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

’கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இப்படத்தின் துவக்க விழாவின் பூஜை இன்று காலை அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு,  ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர்  பி.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

Jyothika new movie

 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.