Jul 04, 2018 05:53 PM

’காலா’ பட நடிகைக்கு கல்யாணம்! - சென்னை தொழிலதிபரை மணக்கிறார்

’காலா’ பட நடிகைக்கு கல்யாணம்! - சென்னை தொழிலதிபரை மணக்கிறார்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘காலா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வேறு ஒரு ரஜினிகாந்தை பார்த்ததுடன், ரஜினியை தவிர அப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் ரசிகர்கள் மனதில் பதிந்தனர்.

 

இந்த நிலையில், ’காலா’ படத்தில் ரஜினியின் மருமகள்களாக நடித்த சிங்கப்பூர் சுகன்யா என்பவருக்கு திடீரென்று திருமணம் நிச்சயமாகியுள்ளது. 

 

’காலா’ படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் சிங்கப்பூர் சுகன்யா, தனது கல்லூரி நண்பரான விக்ரம் என்ற தொழிலபரை திருமணம் செய்ய இருக்கிறார். விக்ரம் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். 

 

Singapore Suganya

 

சுகன்யா - விக்ரம் திருமணம் வரும் ஜூலை 14 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சுகன்யாவின் சொந்த ஊரான திண்டுக்கல்லில் நடைபெற இருக்கிறது.

 

திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சுகன்யா நடிப்புக்கு முழுக்கு போடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.