Mar 17, 2019 08:47 AM

காதல் கல்யாணம் தான் பெஸ்ட்டுனு சொல்லும் ’கடலை போட பொண்ணு வேணும்’

காதல் கல்யாணம் தான் பெஸ்ட்டுனு சொல்லும் ’கடலை போட பொண்ணு வேணும்’

ஆர்.ஜி மீடியா தயாரிக்கும் ராபின்சன் வழங்கும் ‘கடலை போட பொண்ணு வேண்டும்’ படத்தில் டிவி புகழ் அசார் ஹீரோவாக நடிக்கிறார். ஆனந்தராஜ் இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஆனந்தராஜ் கூறுகையில், ”என் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் அசார், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக கதாநாயகியை தேடி வரும் இளைஞனாக நடித்துள்ளார்.  காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம்.  காதல் என்பதே புரிதல் தான், இதை தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்டாரா? கல்யாணம் செய்தாரா என்பது மீதி கதை. ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய படம் என்றால் அது மிகையாகாது. கதையின் இரண்டாவது பாகம் முழுவதும்  ‘காதலர் தினம்' அன்று  நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக யோகிபாபு,  செந்தில்,  மன்சூர் அலிகான், ‘லொல்லுசபா' மனோகர் மற்றும் சுவாமிநாதன், ‘ஃபைட்டர்' தீனா, ‘பிக்பாஸ்' காஜல் போன்ற பல நகைச்சுவை  நடிகர்கள் சேர்ந்து நடித்த நகைச்சுவை படம்.  

 

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன்,  ஜுபின் இசையமைக்கிறார் மற்றும் சந்துரு இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.  பாட்டிற்கு உயிருட்டும் விதமாக சங்கர் மஹாதேவன் சார் மற்றும் வைகோம்  விஜயலக்ஷ்மி பாடலை பாடியுள்ளனர். படத்தின் பாடல்களின் தாளத்திற்கேற்ப கச்சிதமாக தீனா மற்றும்  ராதிகா நடனம் இயக்கியுள்ளனர். 

 

மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. காதலித்து கல்யாணம் செய்வதை இலக்காக கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறையவைப்பது உறுதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்” என்றார்.