’பிக் பாஸ் 3’ க்கு கமல் கேட்ட சம்பளம்! - அதிர்ச்சியடைந்த நிறுவனம்

பல்வேறு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி தமிழில் இரண்டு சீசன்களாக் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு சீசன்களையுமே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களை கூட பிக் பாஸ் நிகழ்ச்சி டிவி முன்பு உட்கார வைத்தது. அந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன், அரசியலில் ஈடுபட்டிருப்பதால், ‘இந்தியன் 2’ படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், வேறு நடிகரை வைத்து நிகழ்ச்சியை தயாரிக்க முடிவு செய்த நிலையில், கமல்ஹாசனை வைத்தே மூன்றாம் சீசனை தயாரிக்கலாம், என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம்.
இது குறித்து கமல்ஹாசனின் பேச்சுவார்த்தை நடத்திய போது, மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க சம்மதித்த கமல்ஹாசன், சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வீதம், மொத்தம் 100 நாட்களுக்கு ரூ.100 கோடி கேட்டாராம். அவரது இந்த சம்பள தொகையை கேட்டதும் அதிர்ச்சியடைந்த நிறுவனம், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.