Jun 30, 2018 05:57 PM

நடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் கமல்ஹாசன்!

நடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் கமல்ஹாசன்!

ட்விட்டரை பொழுதுபோக்கிறாக அல்லாமல், அதை எனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறேன், என்று கூறிய கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

 

அப்போது, ”நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 

அந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், ”எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று தெரிவித்தார்.