’கமல் 60’ நிகழ்ச்சி! - கோடிகளை அள்ளிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் 65 வது பிறந்தநாள் மற்றும் அவரது கலையுலக பயனத்தின் 60 வது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னையில் நேற்று பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது.
’உங்கள் நான்’ என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதோடு, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், கமல் 60 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமைக்காக விஜய் டிவி சுமார் ரூ.3.5 கோடி ராஜ்கமல் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாம்.
மேலும், கமல் 60 நிகழ்ச்சியின் டிக்கெட்களை விற்பனை செய்யும் பொருப்பை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருந்த ராஜ்கமல் நிறுவனம் அதன் மூலம் சில கோடிகளை ஈட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.