Jun 08, 2018 03:08 PM

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் சென்னையில் கைது!

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் சென்னையில் கைது!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் துனியா விஜய், சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

’மஸ்தி குடி’ என்ற படத்தில் துனியா விஜய் நடித்து வந்தார். இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஏரியில் படமாக்கப்பட்ட போது, அனில் ராகவ் மற்றும் உதய் என இரண்டு நடிகர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் கெளடா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த போது பலமுறை ஆஜராக கூறியும் சுந்தர் கெளடா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 

இதனால் அவரை போலீசார் கைது செய்ய வீட்டிற்கு செல்ல அந்த நேரத்தில் நடிகர் துனியா விஜய் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் சுந்தர் வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறியிருக்கிறார்.

 

குற்றவாளியை ரகசியமாக தப்பிக்க வைத்த நடிகர் துனியா விஜய் மீது வழக்கு பதிவு செய்த பெங்களூர் போலீசார், இன்று சென்னையில் வைத்து நடிகர் துனியா விஜயை கைது செய்தனர்.